சுடச்சுட

    

    ஆறாவயல் பள்ளியில் தென்மாவட்ட அளவிலான கலாசார போட்டிகள்

    By தேவகோட்டை  |   Published on : 24th July 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் தென்மாவட்ட அளவிலான கலாசார போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

    மதுரை சகோதயா கூட்டமைப்பு சார்பில் ஆரோகணம்-2016 என்ற தலைப்பில் கலாசாரப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கலாசார விழாக்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலங்களின் கலாச்சாரத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களையும், பெரியவர்களையும் மரியாதையுடன் கவனித்துக் கொள்ளவேண்டும். மேலும், அன்றாடம் புதிய, புதிய செய்திகளை அறிந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களை புதுப்பித்துகொள்ள வேண்டும் என்றார்.

    அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தரும், அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவியுமான பேராசிரியை மணிமேகலை வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் மின்துறை உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை, மதுரை மகாத்மா பள்ளி மக்கள் தொடர்பு அலுவலரும் சகோதயா அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து 1000 மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    நிறைவு விழாவில் மதுரை சகோதயா அமைப்பின் தலைவர் ஹம்சப்பிரியா தலைமை வகித்தார். சார் } ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார். தமிழ் ஆசிரியர் மெய்யாண்டவர் அறிமுக உரை ஆற்றினார். ஆசிரியை அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai