சுடச்சுட

  

  கருக்காத்தகுடி தேவாலயத்தில் தேர்பவனித் திருவிழா தொடக்கம்

  By திருவாடானை,  |   Published on : 24th July 2016 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானைத் தாலுகா கருக்காத்தகுடி கிராமத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  சி.கே. மங்கலம் பங்குத் தந்தை தாமஸ் தலைமையில் வெள்ளிகிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது. ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ஜெயராஜ் இலங்கையேஸ்வரன், பள்ளித் தலைமை ஆசிரியர் சிரோம் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் பாதயாத்திரையாக வந்து கலந்து கொண்டனர். திருப்பலிக்குப் பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழச்சியான புனித இஞ்ஞாசியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி வரும் 30 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி கொடி இறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கருக்காத்தகுடி கிராம தலைவர் அந்தோணி, மைக்கேல் தலைமையில் பொதுமக்கள் செய்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai