சுடச்சுட

    

    பரமக்குடி பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்பு மாநில போட்டிக்கு தேர்வு

    By பரமக்குடி,  |   Published on : 24th July 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் சனிக்கிழமை பாராட்டி கெளரவித்தனர்.

    ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 157 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை செய்திருந்தனர். இதில் பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்.சுந்தரநாராயணன் தயாரித்த, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் வசிப்போரை நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் காப்பாற்றும் வகையில் முன்கூட்டி தகவல் அளிக்கும் படைப்புக்கு 2-ஆம் இடமும், எம்.மதுசூதனனின், உணர்வியல் மூலம் உயரமான கட்டடங்களின் உயரத்தை துல்லியமாக அளந்திடும் கருவிக்கு 3 ஆம் இடமும் கிடைத்தன.

    இம்மாணவர்களின் படைப்புகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற இம்மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஆர்.முருகானந்தம், பொருளாளர் எஸ்.தெட்சினாமூர்த்தி, பள்ளியின் முதல்வர் ஆர்.ஜெயபிரமிளா ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர். பள்ளி துணை முதல்வர் கவிதா நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai