சுடச்சுட

    

    போலீஸாருக்கு கொலை மிரட்டல்:வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு

    By முதுகுளத்தூர்  |   Published on : 24th July 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதியில் போலீஸாரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குரைஞர் மீது கமுதி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் விஜயசுந்தர், முருகானந்தம். முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிந்து வருபவர் முருகேசன். காவலர்கள் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் கைதி ஒருவருக்கு மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு வந்துள்ளனர். சான்று பெற தாமதம் ஆனதாக தெரிகிறது. அப்போது, கைதிக்காக ஆஜராகும் வழக்குரைஞர் முருகேசன் இரண்டு காவலர்களையும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இந்நிலையில், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கமுதி காவல் நிலையத்தில் இருவரும் புகார் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் சார்பு-ஆய்வாளர் ஜான்சி ராணி, வழக்குரைஞர் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai