Enable Javscript for better performance
மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

    By முதுகுளத்தூர்  |   Published on : 24th July 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி தனது கணவரை விட்டுப்பிரிந்து முதுகுளத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை மலைச்சாமி முதுகுளத்தூர் சென்று, சிவரஞ்சனியை தன்னுடன் வருமாறு அழைத்தாராம். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிவரஞ்சனியின் உறவினர்களான முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த செந்தூர்முருகன், அவரது மனைவி அனுராதா (32), முத்துராமலிங்கம் மகன் குருசெல்வம், வடக்கூரைச்சேர்ந்த கணேசன் மகன் வானஸ்ராஜ் ஆகியோர் சேர்ந்து மலைச்சாமியை தாக்கினராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அனுராதா, குருசெல்வம், வானஸ்ராஜ் ஆகியோரை கைது செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai