சுடச்சுட

    

    முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயில் முளைப்பாரி திருவிழா இன்று தொடக்கம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 24th July 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயில் முளைப்பாரித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்குகிறது.

    காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், கோயிலில் இருநது மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று முத்து பெறுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாளுக்கும், அருள்மிகு தர்மதவாள விநாயகருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் தொடர்ச்சியாக தினசரி இரவு ஆலயத்தில் சகஸ்ரநாம அர்ச்சனை, பெண்கள் கும்மி மற்றும் கோலாட்டம்,சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். 3 ஆம் தேதி காலையில் பொங்கல் வைபவமும், அதனைத் தொடர்ந்து குழந்தைகள் கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச்சென்று கங்கை சேர்த்தல் வைபவமும் அதனையடுத்து சாந்த அபிஷேகமும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபை,ஆயிரவைசிய மகளிர் முளைப்பாரி விழாக்குழு ஆகியோர் செய்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai