Enable Javscript for better performance
ராமேசுவரத்துக்கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்துக்கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை

    By பரமக்குடி  |   Published on : 24th July 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரத்துக்கு மீட்டர்கேஜ் ரயில்பாதை இருந்த போது, பாலக்காடு-ராமேசுவரம், திருச்சி- ராமேசுவரம் பயணிகள் இரவு நேர ரயில், கோயம்புத்தூர்-ராமேசுவரம் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த ரயில்களால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் பயனடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மதுரை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர் பகுதிகளுக்குச் சென்றுவரவும், கேரள மக்கள் ஏர்வாடி வருவதற்கும் இந்த ரயில்கள் உதவிகரமாக இருந்தன.

    மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபின் கோவை - ராமேசுவரம் உள்ளிட்ட பல ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே இந்த ரயில்களை மீண்டும் இயக்க மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai