Enable Javscript for better performance
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டஇளைஞர் தீக்குளிப்பு: அபிராமம் காவல்நிலையம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டஇளைஞர் தீக்குளிப்பு: அபிராமம் காவல்நிலையம் முற்றுகை

    By முதுகுளத்தூர்  |   Published on : 24th July 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் அபிராமம் காவல்நிலையத்தை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நந்திசேரி விலக்கு சாலையில் கடந்த வாரம் விஜயன் என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். இதுகுறித்து அபிராமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சடையனேந்தலைச் சேர்ந்த பழனிராஜன் (35), என்பவரை சனிக்கிழமை அபிராமம் காவல் நிலையத்திற்கு போலீஸார் விசாரணைக்கு அழைத்துவந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பழனிராஜன் வீட்டிற்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், பலத்தகாயம் அடைந்த பழனிராஜன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பழனிராஜன் உறவினர்கள் மற்றும் சடையனேந்தல் கிராம மக்கள் அபிராமம் காவல் நிலையத்தை காலை 9 மணியளவில் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கமுதி வட்டாட்சியர் செந்தில்குமார், முதுகுளத்தூர் டி.எஸ்.பி கணபதி ஆகியோர் கிராம மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும்,பழனிராஜனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இல்லையெனில் முற்றுகையை கை விடமாட்டோம் என கிராம மக்கள் கூறினர். அதிகாரிகளின் சமரசத்தைத் தொடர்ந்து முற்றுகையை கை விட்டனர். இதனால் கமுதி- மதுரை சாலையில் போக்குவரத்து பாதித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai