விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. பிரசார இயக்கம்
By திருவாடானை | Published on : 24th July 2016 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாடானை தாலுகா, தொண்டி, மங்களக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது. திருவாடானை ஓரியூர் நான்கு வீதி சந்திப்பு சாலையில் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தாலுகா செயலர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய சங்க செயலர் முத்துராமு, மாவட்டச் செயலர் காசிநாததுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி, கோதுமை ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.