சுடச்சுட

  

  அனைவருக்கும் பொதுவான தலைவர் காமராஜர்: அமைச்சர் பேச்சு

  By ராமநாதபுரம்  |   Published on : 25th July 2016 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காமராஜர் அனைவருக்கும் பொதுவானத் தலைவராகவும், தேசிய தலைவராகவும் திகழ்ந்தால், அவரை ஒரு குறிப்பிட்ட சமுதாய எல்லைக்குள் வைத்து பேசக்கூடாது என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

     ராமநாதபுரம் பாரதி நகரில் ஒரு திருமண மகாலில் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பில், காமராஜரின் 114 ஆவது பிறந்த தின விழா அறக்கட்டளையின் தலைவர் எஸ். ராமசாமி தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளையின் அமைப்பாளர் தி. அம்மமுத்து, நாடார் மகாஜன சங்க இணைச் செயலர் டி. மோகன், நிர்வாகிகள் டி.ஏ.எல்.சி. திருமூர்த்தி, வி.பி.எம்.கே. கருணாமூர்த்தி, துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து, சங்க துணைச் செயலர் கே. குகன் பேசினார். விழாவை, சத்திரிய நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் டி.ஏ.எல்.சி.ஏ. செல்வராஜ் குத்துவிளக்கேற்றியும், காமராஜரின் உருவப்படத்தை மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப. அழகர்நாதன் திறந்துவைத்தும் பேசினர். அறக்கட்டளையின் செயலர் கே. பெரியகருப்பன் வரவேற்றுப் பேசினார்.

  விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  டாக்டர் முரு. மணிகண்டன் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

  அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளைப் பரிசு வழங்கி பாராட்டுவது, அவர்களை மேலும் முன்னேறத் தூண்டும். ஒரு அரசியல்வாதி எப்படிப்பட்ட ஒழுக்கவாதியாக இருக்கவேண்டும், நாட்டு மக்கள் மீது எப்படி பற்றுள்ளவராக, தியாக சீலராக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர் காமராஜர்.

  தமிழகத்தில் தொழிற்சாலைகள் வரவும்,  அணைகள் கட்டி வேளாண்மை வளர்ச்சியடையவும் முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் முதல்வர்களில் முக்கியமானவர் காமராஜர்.

  அவர் அனைவருக்கும் பொதுவான தலைவர். காமராஜரை போன்றே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டோரும் பொதுவான தலைவர்கள். அவர்களை ஒரு குறிப்பிட்ட சமுதாய எல்லைக்குள் வைத்து பேசக்கூடாது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai