சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் அப்துல்கலாம் சமாதி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

       ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ளது. ஜூலை 27 ஆம் தேதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதி பகுதியில் மத்திய, மாநில அரசுகள் நினைவு தின நிகழ்ச்சியை நடத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

      இந்த நிகழ்ச்சியில், மத்திய, மாநில அமைச்சர்களும், மத்திய பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் வருகை தந்தார்.

      பின்னர், அப்பகுதியில் கலாமின் உருவச்சிலை அமைக்கும் பணிகளையும், நிகழ்ச்சியையொட்டி தாற்காலிகமாக அமைக்கப்படும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து கண்காட்சி அமைக்கும் பணிகளையும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளையும் பார்வையிட்டார்.

    ராமேசுவரம் வந்த கலாமின் வெண்கலச் சிலை

       அப்துல் கலாம் சமாதி வளாகத்தில், 7 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கலச்சிலையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதனையொட்டி, அங்கு சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தில்லியிலிருந்து தனிவாகனம் மூலம் சனிக்கிழமை இரவு அவரது முழுஉருவ வெண்கலச் சிலை வந்து சேர்ந்தது.   கட்டுமானப்  பணிகள் முடிந்ததும், ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை சிலையை நிறுவ மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai