Enable Javscript for better performance
இளைஞர் தூக்கிட்டு சாவு: பெற்றோர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே கண்ணார்பட்டியில் மரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்துள்ளனர்.

       ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சபரிமணி (23). இவர், வீட்டருகில் உள்ள மரத்தில் இரவில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

       மறுநாள் அதிகாலையில் இதைக் கண்ட அப்பகுதியினர், அவரை மீட்டு கமுதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனையில், இறந்த சபரிமணியின் உடலில் சில இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருப்பதாக, கமுதி காவல் நிலையத்தில் சபரிமணியின் தாயார் ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai