சுடச்சுட

    

    தனுஷ்கோடியில் கடலில் மூழ்கி மதுரை ஆசிரியர் சாவு

    By ராமேசுவரம்  |   Published on : 25th July 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனுஷ்கோடி பகுதியை ஞாயிற்றுக்கிழமை சுற்றிப் பார்க்கச் சென்ற மதுரை தனியார் பள்ளி ஆசிரியர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

       மதுரை மாவட்டம், திருமங்கலம் கன்ட்ராம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (23). இவர், அப்பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி பகுதியில் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.

      அப்போது, அப்பகுதி கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, பிரபாகரன் அலையில் சிக்கி மூழ்கி இறந்தார். சில மணி நேரம் கழித்து, மற்றொரு அலையில் இவரது உடல் கரைப் பகுதிக்கு அடித்து வரப்பட்டது.

      இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த  மண்டபம் கடலோரப் பாதுகாப்பு போலீஸார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai