Enable Javscript for better performance
திருஉத்தரகோசமங்கையில் ஆக.7 இல் திருவிளக்குப் பூஜை- Dinamani

சுடச்சுட

    

    திருஉத்தரகோசமங்கையில் ஆக.7 இல் திருவிளக்குப் பூஜை

    By ராமநாதபுரம்  |   Published on : 25th July 2016 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேசுவரி சமேத ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது.

     பெண்களிடம் அன்பு, சகிப்புத்தன்மை, பொறுமை, பரோபகாரம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வளர்ப்பதற்காக, விவேகானந்தா கேந்திரம் சார்பில், கிராமங்கள்தோறும் திருவிளக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பெண்களுக்கிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை, குழுவாக இணைந்து பணிபுரிதலின் அவசியம், ஆன்மிகச் சிந்தனைகள் போன்ற குணங்கள் மேலோங்கும். மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி இல்லத்திலும் மனிதர்களின் மனங்களும் ஒளிபெறுகிறது.

     எனவே, ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் திருவிளக்குப் பூஜையிலும், ஆன்மிகச் சொற்பொழிவிலும் கலந்துகொண்டு, பெண்கள் பயன்பெறுமாறு விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai