சுடச்சுட

    

    திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஜூலை 27 இல் ஆடிப்பூரத் திருக்கல்யாண தேரோட்டம்

    By திருவாடானை  |   Published on : 25th July 2016 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

     பிரசித்திபெற்ற இக்கோயிலில்  ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருக்கல்யாணத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா புதன்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, தினமும் இரவு கேடகம், பல்லக்கு, காமதேனு, அன்னம், கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

      விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆடிப்பூரத் திருக்கல்யாண வைபவம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.   விழாக்கான ஏற்பாட்டினை, சரகப் பொறுப்பாளர் சந்திரசேகரன் திவான் மற்றும் நிர்வாகச் செயலர் மகேந்திரன் மற்றும் நாட்டார்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai