சுடச்சுட

  

  திருவாடானை தாலுகா, தொண்டியில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தொண்டியில் 10 ஆண்டுகளுக்கு முன் அரசுப் போக்குவரத்து பணிமனை அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. அதையடுத்து, திருவாடானையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கிய சில நாள்களிலேயே கிடப்பில் போடப்பட்டது.   திருவாடானையில் இருந்து தினமும் இரவு 10-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவகோட்டை போக்குவரத்து  பணிமனைக்கு வந்து செல்கின்றன. மறுநாள் காலையில், திருவாடானையில் இருந்து மற்ற கிராமங்களுக்குச் செல்கின்றன. இதனால் நேரம் வீணாவதுடன், எரிபொருள் செலவுகளும் அதிகரித்து வருகின்றன.

  எனவே,  மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து அரசு போக்குவரத்து பணி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai