Enable Javscript for better performance
ராமேசுவரம் முதல் மானாமதுரை வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் முதல் மானாமதுரை வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்கம்

    By ராமேசுவரம்  |   Published on : 25th July 2016 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், ராமேசுவரம் முதல் மானாமதுரை ரயில் நிலையம் வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சி, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

       மத்திய அரசு, ராமேசுவரம் ரயில் நிலையத்தை பசுமை ரயில் நிலையமாக மாற்ற அறிவித்திருந்தது. அதன்பேரில், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில் பெட்டிகளிலும், பயணிகளின் சுகாதாரம் கருதி தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கவும், பயோ-மெட்ரிக் கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளது.

      இதையொட்டி, ராமேசுவரம் ரயில் நிலையம் முதல் மானாமதுரை ரயில் நிலையம் வரை பசுமை ரயில் வழித்தடமாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

      இதன் தொடக்க விழா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரயில்வே துறையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்தத் திட்டத்தை கணொலிக்காட்சி மூலம் தொடக்கி  வைத்தார்.

      இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்காக, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

     இத்திட்டத்துக்கான கல்வெட்டை, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் திறந்துவைத்து, திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

      இந்தத் திட்டம் குறித்து, ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்த கண்காட்சியை, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் திறந்துவைத்து பார்வையிட்டார்.

      நிகழ்ச்சியில், தென்னக ரயில்வே இயந்திரப் பிரிவு முதன்மைப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் குணசேகரகன், மதுரை கோட்ட ரயில்வே வணிக மேலாளர் ரத்திப்ரியா மற்றும் ரயில்வே அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai