சுடச்சுட

  

  திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் தூயசெங்கோல் மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

    தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த தூயசெங்கோல் மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஜூலை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு  திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்தடன் தொடங்கியது. ஓரியூர் பங்குத்தந்தை ஜெயராஜ் இலங்கேஸ்வரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரோம் ஆகியோர் அன்னையின் உருவம் பொறித்த கொடியை அர்ச்சிப்பு செய்தனர். பங்குத் தந்தை சாமிநாதன் தலைமையில் திருப்பலி, கொடியேற்றம் நடைபெற்றது. 10நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவு திருப்பலியும் சிறப்பு மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகளும் சிறப்பு ஜெபமும் நடைபெறும்.

   முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும். விழா ஏற்பாட்டினை பங்குத்தந்தை சாமிநாதன் தலைமையில் காரங்காடு பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai