சுடச்சுட

  

  பரமக்குடியிலிருந்து தெ.புதுக்கோட்டை வழியாக மானாமதுரை, காரைக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சாலையில் தனியார் பள்ளி வாகனங்களும் ஏராளமாகச் சென்று வருகின்றன.

   மேலும் தெ.புதுக்கோட்டை செம்மண் குவாரியில் மண் அள்ளிவரும் டிப்பர் லாரிகளும், வளையனேந்தல் பகுதியிலிருந்து பால் வண்டிகள், முனைவென்றி பகுதியிலிருந்து காய்கறி  வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சாலையில் செல்வதால் போக்குவரத்து அதிகம்.

  இந்நிலையில் இச்சாலை ஓரங்களில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

   மேலும் சாலையோரம் செடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்து இடையூறை ஏற்படுத்துகின்றன.

    எனவே பள்ளங்களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai