Enable Javscript for better performance
பரமக்குடியில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    By பரமக்குடி  |   Published on : 26th July 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 9-இல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தருவதை முன்னிட்டு அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கட்சியின் அவைத்தலைவர் சாதிக்அலி தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் பாஸ்கரன், பசீர்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் பொறுப்பாளர் பழ.சரவணன் வரவேற்றார்.

    ஆகஸ்ட் 9-இல் வரும் பொதுச்செயலாளர் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டச் செயலர் கே.ஏ.எம்.குணா, மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். தலைமை செயற்குழு உறுப்பினர் என்.பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் பிச்சைமணி, மாவட்ட பொருளாளர் போஸ் உள்பட நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai