Enable Javscript for better performance
பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் சாவு

    By முதுகுளத்தூர்  |   Published on : 26th July 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் அருகே புல்லந்தையைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன்(37). முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தேரிருவேலியில் இருந்து கையகம் வழியாக பரமக்குடி செல்லும் தார் சாலையில் உள்ள பாலத்தின் மேல் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருதுபாண்டியன் பலியானார். தேரிருவேலி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஓம்ராஜா கொடுத்த புகாரின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்(பொ) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai