சுடச்சுட

    

    பொதுப் பட்டாவை ரத்து செய்ய திருப்பாலைக்குடி மீனவர்கள் கோரிக்கை

    By ராமநாதபுரம்  |   Published on : 26th July 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பாலைக்குடியில் மீனவர்கள் வலையை காயப்போடும் இடத்தை பொதுப் பட்டாவாக கொடுத்ததை ரத்து செய்யுமாறு, அப்பகுதியினர் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

      திருவாடானை அருகே திருப்பாலைக்குடி காந்தி நகர் மீனவர் குடியிருப்பு சங்கத் தலைவர் எஸ். முனீஸ்வரன், செயலர் ஜி. மச்சவல்லான், பொருளாளர் ஆர். சித்திரவேல் ஆகியோர் தலைமையில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

      காந்தி நகரில் மீனவர்கள் வலையை காயப் போடவும், வலைகளைப் பழுது பார்க்கவும் உபயோகப்படுத்தி வந்த இடத்தை, 140 பேருக்கு பிரித்து வீட்டு மனைப் பட்டாவாக கொடுக்கப்பட்டுள்ளது. சுனாமி வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில், வீட்டு மனைப்பட்டா வாங்கியவர்கள் 13 ஆண்டுகளாக வீடு கட்டவில்லை. எனவே, அரசின் சார்பில் கொடுத்த பட்டாக்களை ரத்து செய்வதுடன், மீண்டும் மீனவர்கள் அந்த இடத்தில் மீன்பிடி வலைகளை காயப்போடுவதற்கு அனுமதி வழங்குமாறும், அதில் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai