சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் நவ. 4 முதல் 13 வரை புத்தகத் திருவிழா

    By ராமநாதபுரம்  |   Published on : 26th July 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத்திருவிழா நடத்துவது என திங்கள்கிழமை கலை இலக்கிய ஆர்வலர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    ராமநாதபுரத்தில் கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது: ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 3 முறை  புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியுள்ளோம். இந்த ஆண்டும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத்திருவிழாவை ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு உண்டியல் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு வரை படித்திருப்பவர்கள் ரூ.500க்கும், பிளஸ் 2 வரை படித்திருக்கும் மாணவர்கள் ரூ.1000க்கும் புத்தகங்கள் வாங்கினால் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் வரை வாங்கும் பொதுமக்களுக்கு சான்றிதழ்களும், ரூ.5 ஆயிரம் வரை புத்தகம் வாங்குவோருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்படும்.புத்தகத் திருவிழாவுடன் இணைந்து மூலிகைத் திருவிழா, சிறுதானிய உணவுத் திருவிழா, சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகளை தினசரி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

    கூட்டத்திற்கு துணைத்தலைவர்கள் ஜெ.தினேஷ்பாபு, பா.ஜெகதீசன், துணைச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சித்த மருத்துவர் வான்.தமிழ் இளம்பருதி வரவேற்றார். பொருளாளர் குரு.கதிரேசன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் எழுத்தாளர் உரப்புளி ஜெயராமன், ஹெச்.ஜான் சௌந்தர்ராஜ், ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் கார்த்திகேயன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai