சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலை பலத்த மழை பெய்தது.

  ராமநாதபுரம் நகரில் திங்கள்கிழமை காலையில் திடீரென பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால்  அரசு மருத்துவமனை சாலை, மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பகுதிகள் ஆகியனவற்றில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

   பிரதான சாலைகளான சிகில் ராஜவீதி, வண்டிக்காரத்தெரு, சாலைத்தெரு ஆகிய பகுதிகளில் அண்மையில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஒரு அடி உயரமாக இருப்பதால் சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி வர்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சில வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பம்ப் மூலம் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றினர்.

  திருவாடானை:  திருவாடானை தாலுகா ஆர்எஸ் மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. 

  இதனால் மங்கலம், வண்டல், வரவணி, சனவேலி, சிகே மங்கலம், ஏ.ஆர் மங்கலம், பாரனூர், தும்படாகோட்டை ஆகிய பகுதிகளில் தெருக்களிலும் வயல் வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

  வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழச்சி அடைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai