சுடச்சுட

  

  ராமேசுவரம்-மானாமதுரை இடையே பசுமை ரயில் வழித்தடம்: நாட்டிலேயே முதல் முறை

  By சென்னை  |   Published on : 26th July 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம்-மானாமதுரை இடையேயான பசுமை ரயில் தடம் திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடக்கி வைத்தார்.

  இந்திய ரயில்வே வரலாற்றில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.

  ராமேசுவரம்- மானாமதுரை வழித்தடத்தில் ஓடும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் உலர் கழிப்பறை (பயோ டாய்லெட்) வசதி நிறுவப்படுகிறது. இதுபோன்று ஒருவழித் தடத்தில் ஓடும் அனைத்து பெட்டிகளிலும் உலர் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது நாட்டிலேயே இது முதல் முறையாகும். உலர் கழிப்பறை வசதி மூலம் மனிதக் கழிவுகள் ரயில் பாதையில் விழுவது தடுக்கப்படும். மேலும் ரயில் தண்டவாளங்கள் துருப்பிடிப்பதும் குறையும்.

  ராமேசுவரம்-மானாமதுரை இடையே மொத்த தூரம் 114 கி.மீ. ஆகும். சுடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தாவரை, உச்சிப்புளி, மண்டபம் முகாம், மண்டபம், பாம்பன், ராமேசுவரம் என்று மொத்தம் 9 ரயில் நிலையங்கள் உள்ளன. மானாமதுரை-ராமேசுவரம் இடையே தினமும் பயணிகள் ரயில், விரைவு ரயில், சிறப்பு ரயில்கள் என்று 26 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேசுவரம் ரயில் நிலையத்தை தினமும் 35 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

  4 ஆவது ரயில் பாதை:  திருவாலங்காடு-திருவள்ளூர் இடையே ரூ.180 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது ரயில் பாதை அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை-அரக்கோணம் இடையே 4 வழித்தடங்கள் கிடைத்துள்ளன. இதில் 2 பாதைகள் முற்றிலும் புறநகர் ரயில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் இதன் மூலம் மின்சார ரயில்கள் தாமதமாவது தவிர்க்கப்படும்.

  நகரும் படிக்கட்டுகள்: நெல்லை ரயில் நிலையத்தில் 1, 2, 3 ஆகிய நடைமேடைகளை இணைக்கும் விதமாக 2 நகரும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் 1, 3, 4 ஆகிய நடைமேடைகளை இணைக்கும் வகையில் 2 நகரும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் அமைச்சர் சுரேஷ் பிரபு ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

  அரியலூர் - மாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான 25 கி.மீட்டர் தூரத்தில் அனைத்து ரயில் தடங்களும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

  சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய மருத்துவ வசதிகளை ரயில்வே ஊழியர்கள் பெறும் வகையில் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைச்சர் சுரேஷ்பிரபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai