Enable Javscript for better performance
அதிகாரிகளின் அலட்சியத்தால் மகள் இறந்த அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    அதிகாரிகளின் அலட்சியத்தால் மகள் இறந்த அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை சாவு

    By ராமநாதபுரம்  |   Published on : 27th July 2016 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மகள் இறந்த அதே இடத்தில் மின்கம்பி உரசியதில் கட்டடத் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

      ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு ஆண்டி மகன் ஆ.புஷ்பராஜ்(45)கட்டடத் தொழிலாளியான இவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அதிக மின்அழுத்தம் உடைய மின்கம்பி உரசியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

      இவர் இறந்த அதேஇடத்தில் புஷ்பராஜ் மகள் முத்தரசியும் கடந்த 8.2.2016 அன்று மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.   இவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மின்கம்பியை சரிசெய்யும்படி பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், சரிசெய்யததால் இருவரும் உயிரிந்தனர் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

      இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai