சுடச்சுட

    

    கமுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

    By முதுகுளத்தூர்  |   Published on : 27th July 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு பிப் 22இல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதனால் கமுதி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ராமசாமிபட்டி,காவடிபட்டி,பெருநாழி,புதுக்கோட்டை,செங்கற்படை,நெறிஞ்சிப்பட்டி,இடைச்சியூரணி,பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது காய்கறிகளை நேரடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில்,ஒரு சிலர் இடையூறு ஏற்படுத்தியதால் உழவர் சந்தை மூடப்பட்டது.  தற்போது, 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர்சந்தை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ராமசாமிபாண்டியன், நிர்வாக அலுவலர் நந்தீஸ்வரன்,கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai