Enable Javscript for better performance
கலாம் நினைவிடம் வரை சைக்கிள் பேரணி: ராமநாதபுரத்தில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கலாம் நினைவிடம் வரை சைக்கிள் பேரணி: ராமநாதபுரத்தில் வரவேற்பு

    By ராமநாதபுரம்  |   Published on : 27th July 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டையிலிருந்து கலாம் நினைவிடத்துக்கு சைக்கிளில் பேரணியாக வந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

       புதுக்கோட்டை மாவட்ட ஜெ.சி.ஐ.அமைப்பின் மண்டலத் தலைவர் சேதுரெத்தினம் தலைமையில் அம்மாவட்டத்தை சேர்ந்த செந்தூரான் கல்லூரி ஜெ.சி.ஐ.அமைப்பின் உறுப்பினர்கள் 20 பேர், புதுக்கோட்டை நகர் சைக்கிள் நண்பர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 20 பேர் உள்பட மொத்தம் 40 பேர் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.  புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதிக்கு வந்த அவர்களை ராமநாதபுரம் ஜெ.சி.ஐ.அமைப்பின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் தேன்கூடு பிரபாகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.   பின்னர், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai