சுடச்சுட

  

  "காமராஜர் சிலைகள் வைக்க அனுமதி கோரி சென்னையில் ஆகஸ்ட் 19இல் ஆர்ப்பாட்டம்'

  By ராமநாதபுரம்  |   Published on : 27th July 2016 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லை,சிவகங்கையில் காமராஜர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கக் கோரி ஆக.19இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர். தனபாலன் தெரிவித்தார்.

    ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

                  நெல்லை மாவட்டம் பானாங்குடியில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முழுஉருவ வெண்கலச் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். இதேபோல்  சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

          பேட்டியின் போது, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ரஜி.சேதுபதி,மாநிலத் துணைத்தலைவர் கல்பாக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai