சுடச்சுட

    

    காவலர்களுக்கு கலவரத்தை அடக்கும் பயிற்சி

    By முதுகுளத்தூர்  |   Published on : 27th July 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களுக்கு கலவர அடக்கும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

      ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பயிற்சி காவலர்களுக்கு கடந்த 4 மாதமாக பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், தூத்துக்குடி,அரியலூர் மாவட்டங்களில் இருந்து தமிழக இளைஞர் காவல்படையில் பணிபுரிந்த 137 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

     இப்பயிற்சியின்போது, துப்பாக்கி சுடுதல், போராட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பது, யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், கமுதி ஏ.எஸ்.பி தேஸ் முக்தாஸ் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai