சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் சமூகபாதுகாப்புத் துறையின் சார்பில் பேரையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் எஸ்.சத்தியசீலன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்,ஊராட்சி துணைத் தலைவர் கே.ருபி,பணித்தள பொறுப்பாளர் எம்.ரசினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பது குறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பூங்கொடி ஆலோசனைகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள்,குழந்தைகள் திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஊராட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai