சுடச்சுட

    

    திருவாடானை பகுதி கோயில்களில் ஆடித் திருவிழா

    By திருவாடானை  |   Published on : 27th July 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகாவில் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

      தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பால் காவடி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.   அதே போல் திருவாடானை மலை வேண்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

      ஆர்.எஸ்.மங்களம் அரசாளவந்த அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai