சுடச்சுட

    

    படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

    By ராமேசுவரம்  |   Published on : 27th July 2016 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

      பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி மீனவ கூட்டமைப்பு சங்கத் தலைவர் என்.ஜெ.போஸ் தலைமை வகித்தார். ராமேசுவரம் துறைமுக மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.

     இதில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து வைத்துள்ள  தமிழக மீனவர்களின் 111 படகுகளையும் விடுவிக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாம்பன் பகுதி மீனவர்கள் 4 பேரை விடுவிக்க வேண்டும். இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிப்பதற்கு இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் மீது மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் கோஷமிட்டனர்.

      பின்னர், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமேசுவரம் பகுதியிலுள்ள அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகளும், மீனவ  பெண்களும், மீனவர்களும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai