சுடச்சுட

  

  மேலும் இருவருக்கு 6 மாதம் சிறை: ஜாதியை சொல்லி திட்டியவருக்கு ஓராண்டு சிறை

  By ராமநாதபுரம்  |   Published on : 27th July 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே சூடியூரில் ஜாதியை சொல்லித் திட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மேலும், இருவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

     சூடியூரில் வசிக்கும் ராமச்சந்திரன் மகன் முத்துப்பாண்டி. இவர், கடந்த 2012 மார்ச் மாதம் நடைபெற்ற முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் சிலை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், ரவி மற்றொரு முத்துப்பாண்டி உள்ளிட்ட 8 பேர், பணியில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை ஜாதியை சொல்லித் திட்டியதுடன் கம்பால் தாக்கினராம்.

    இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 8 பேர் மீதும் பார்த்திபனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மீனாசதீஷ் முன்னிலையில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயப்பிரகாஷுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ரவி மற்றும் மற்றொரு முத்துப்பாண்டி இருவருக்கும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும்,ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். புகாரில் குறிப்பிட்டுள்ள மேலும் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் ஜெயசங்கர் ஆஜரானார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai