சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் அம்மா வேலைவாய்ப்புத் திட்டம்: ஆட்சியர்

    By ராமநாதபுரம்  |   Published on : 27th July 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

      குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாளர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதால் அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்களது நிறுவனங்களிலேயே பணி அமர்த்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

      அழகுக்கலை, மெடிக்கல் ரூரல் நர்சிங், பேப்பர் கேன், வெல்டிங், எலெக்ட்ரீசியன், பிட்டர், சி.என்.சி.டானிக் மில்லிங், சுவீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் உற்பத்தி, உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல், பிரிண்டிங், சில்லறை விற்பனையாளர்கள், டி.டி.பி, போன்ற தொழில் இனங்களில் 6 மாத கால பயிற்சி வழங்கப்பட்டு, தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்படும்.

      இதில், ஆர்வமுள்ள இருபாலரும் தங்களது பிறந்த தேதி, வயது,கல்வித் தகுதி, தகுதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது w‌w‌w.‌d‌i​c‌r‌m‌d.‌i‌n​ என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai