ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
By ராமநாதபுரம் | Published on : 27th July 2016 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கரூர்.அன்பழகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவை.மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் முகவை.மாரிமுத்து,மாநில துணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றம் செய்வது தொடர்பாகவும்,7ஆவது ஊதியக்குழு அறிவிப்புகளை வழங்கவும் வல்லுநர் குழு அமைத்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட வரையிலான காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோருதல், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் காசிநாதன், குமரன்,சாமிநாதன்,முனியராஜ் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.