சுடச்சுட

    

    ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப் பூரத் திருவிழா கொடியேற்றம்

    By திருவாடானை  |   Published on : 28th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

      திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி புதன்கிழமை வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

      பின்னர், அம்பாளுக்கும் ஆதிரெத்தினேசுவரருக்கும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

      அதனை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

      விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 4ஆம்தேதி நடைபெறவுள்ளது.   ஆக.7ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.    ஏற்பாட்டை சரக பொறுப்பாளர் சந்திரசேகரன், திவான் மகேந்திரன் மற்றும் பலர் செய்துவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai