Enable Javscript for better performance
திருவாடானை அரசுக் கல்லூரியில் கலாம் நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அரசுக் கல்லூரியில் கலாம் நினைவு தினம்

    By திருவாடானை  |   Published on : 28th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்று நடப்பட்டது.

       நிகழ்ச்சியில், கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வர் லதா தலைமையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

     விழாவில், கல்லுரி முதல்வர் (பொறுப்பு) பழனியப்பன், விரிவுரையாளர்கள் சதீஷ், இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

       இதே போல் திருவாடானை ராஜன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் முதல்வர் நிர்மலா செல்வராஜ் தலைமையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai