சுடச்சுட

  

  பரமக்குடி நகரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    பரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கலாம் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  பள்ளி-கல்லூரிகளில் அஞ்சலி: பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி, செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி மெட்ரிக் பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai