Enable Javscript for better performance
பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை

    By பரமக்குடி  |   Published on : 28th July 2016 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுகாதார வளாகங்கள், பாதுகாப்பு சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள் என மாணவர்களின் மேம்பாட்டுக்கு தேவையானவற்றை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

      இந்த சுகாதார வளாகங்களை பராமரிக்க ஒவ்வொரு பள்ளிகளிலும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்பணியிலிருந்தவர்கள் தற்போது ஓய்வுபெற்று விட்டனர். அந்த இடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேட்டுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. 

     ஆகவே, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai