சுடச்சுட

    

    மத்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க தமிழக மீனவர்கள் இன்று தில்லி பயணம்

    By ராமேசுவரம்  |   Published on : 28th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜை சந்தித்து தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக தமிழக மீனவ குழுவினர் தில்லிக்கு வியாழக்கிழமை செல்கின்றனர்.

       இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து வைத்துள்ள 111 படகுகளை விடுவிக்க வேண்டும். சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருநாட்டு மீனவர்களும் பிரச்னையின்றி சுமுகமாக மீன்பிடிக்க கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்ககோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜை ஜூலை 29ஆம் தேதி தமிழக மீனவ குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.

     இதற்காக ராமேசுவரம் பகுதியிலிருந்து மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் பிரதிநிதிகள் தேவதாஸ், எஸ்,பி ராயப்பன்,எம்,எஸ்,அருள்,பாம்பன் அருளானந்தம் ஆகியோர் வியாழக்கிழமை தில்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக ராமேசுவரம் துறைமுக மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai