சுடச்சுட

  

  ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்: ஆக. 4-இல் தேரோட்டம், ஆக.7 திருக்கல்யாணம்

  By ராமேசுவரம்  |   Published on : 28th July 2016 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

   திருக்கோயிலில் தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில், சன்னதியிலிருந்து பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடகி நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

   அங்கு உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு புனித நீரால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

   பின்னர் திருக்கோயில் குருக்கள் பாஸ்கர்ஜோஷி தலைமையில், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 10.50 மணிக்கு  கொடியேற்றம் நடைபெற்றது.

   தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

   திருவிழாவில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்தக்கடலில்  ஸ்ரீராமர் தீர்ததவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

   ஆக. 4 ஆம் தேதி  பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டமும், ஆக. 6 ஆம் தேதி  அம்மன்  தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

   ஆக.7 ஆம் தேதி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன்  திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai