சுடச்சுட

    

    இருதலைமணியன் பாம்பை விற்க முயற்சி: இலங்கை அகதி உள்பட 3 பேர் கைது

    By ராமநாதபுரம்  |   Published on : 29th July 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டபத்தில் இருதலைமணியன் பாம்பை விற்க முயன்ற இலங்கை அகதி உள்பட 3 பேரை, வியாழக்கிழமை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

      ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான மலைராஜன் மகன் பழனி (37), சந்திரன் மகன் முரளி (30) மற்றும் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் ஜெகன் (32) ஆகிய 3 பேரும், இருதலைமணியன் பாம்பை விற்பதற்காக, மண்டபம் அகதிகள் முகாம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த இவர்களை, சந்தேகத்தின்பேரில் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.

      அதில், அவர்கள் 4 அடி நீளமுள்ள இருதலைமணியன் பாம்பு வைத்திருந்தது தெரியவந்தது. ஜெகன் மண்டபம் அகதிகள் முகாமுக்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் பாம்பைப் பிடித்து, பாம்பனைச் சேர்ந்த மீனவர்களான பழனி மற்றும் சந்திரன் ஆகியோர் மூலம் மதுரையைச் சேர்ந்த வியாபாரியிடம் விற்பதற்காக காத்திருந்த து தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்து, பாம்பை பறிமுதல் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai