சுடச்சுட

  

  இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 70 கிலோ கடல் அட்டை பறிமுதல்: ஒருவர் கைது

  By ராமேசுவரம்  |   Published on : 29th July 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்காக வைத்திருந்த கடல் அட்டையை, போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

    மண்டபம் வடக்குக் கடல் பகுதியில், தமிழக கடலோரப் பாதுகாப்பு போலீஸார் வியாழக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மண்டபம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கட்டேரி பெருமாள் (42) என்பவர், 3 பிளாஸ்டிக் கேன்களில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 70 கிலோ கடல் அட்டை வைத்திருந்தது தெரியவந்தது.  போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக அப்பகுதி மீனவர்களிடம் கடல் அட்டையை சேகரித்ததாக, காட்டேரி பெருமாள் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் அவரைக் கைது செய்து, கடல் அட்டையை பறிமுதல் செய்து, மண்டபம் பகுதியிலுள்ள வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai