சுடச்சுட

    

    உணவுப் பொருள் விற்பவர்கள் உரிமம் பெற  ஆகஸ்ட் 4 கடைசி நாள்

    By ராமநாதபுரம்  |   Published on : 29th July 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவுப் பொருள் விற்பவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக உரிமம் எடுத்திருக்க வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் அறிவுறுத்தியுள்ளார்.

       ராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா உணவகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்கேற்று அவர் மேலும் தெரிவித்தது:

       பாதுகாப்பான உணவு மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த 4.8.2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டமே உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டமாகும்.

     இச்சட்டத்தின்படி, நடைபாதைகள் முதல் 5 நட்சத்திர உணவகங்கள் வரை உணவுப் பொருள் விற்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக உரிமம் பெற்றாக வேண்டும்.  உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு, அதில் தயாரிப்பு தேதி,விலை, உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள், எடை அளவு ஆகியன இருக்கவேண்டும்.

     குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்களாக இருந்தால் கண்டிப்பாக ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத 5 நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

       உணவுப் பொருளின் விற்பனை அளவு ரூ. 12 லட்சம் வரை இருந்தால் ரூ. 100 மட்டுமே கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம். ரூ. 12 லட்சத்திலிருந்து ரூ. 30 கோடி வரை இருந்தால் ரூ. 2000 செலுத்தி உரிமம் பெறவேண்டும்.

      உணவுப்பொருள்கள் நுகர்வோரை கவர்வதற்காக நிறங்கள் சேர்க்கப்படுவதால், அதைப் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே, நிறங்கள் சேர்க்கக் கூடாது.

     அதேபோல், உணவுப் பொருளில் பொட்டாசியம் குரோமைட், சோடியம் சைக்கிளோமைட் ஆகிய இரண்டும் கண்டிப்பாக சேர்க்கக் கூடாது. அஜின மோட்டோ மற்றும் செயற்கை இனிப்புகளை குறிப்பிட்ட அளவுகளில்தான் சேர்க்க வேண்டும்.  ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் நோய்கள் வர வாய்ப்புள்ளது.

      ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,309 வியாபாரிகள் உரிமம் பெறவேண்டிய நிலையில், 50 சதவிகிதம் பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

     மற்றவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் உரிமம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார்.

      கருத்தரங்கில், தமிழ்நாடு வணிகர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.எஸ்.ஒய்.ஜபருல்லாகான், பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சோமசுந்தரம், மாவட்டத் தலைவர் சுப்புராமன், மாவட்டச் செயலர் வெங்கடசுப்பு, வர்த்தக சங்க செயலர் குப்தா. கோவிந்தராஜன், பரமக்குடி ச. ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai