சுடச்சுட

    

    திருவாடானை பகுதியில் கண்மாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

    By திருவாடானை  |   Published on : 29th July 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள கண்மாய், குளங்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால், போதுமான தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் அறுவடை நேரத்தில் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

      திருவாடானை தாலுகா, தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்ற பகுதியாகும். இங்கு, சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. முழுவதும் வானம் பார்த்த பூமி என்பதால், பருவமழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது.

      திருவாடானை தாலுகாவில் சுமார் 400 பொதுப்பணித் துறை கண்மாய்களும், சுமார் 300 ஜமீன் கண்மாய்களும் உள்ளன. சங்கிலி தொடர் போல் உள்ள இந்த கண்மாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால், காட்டு கருவேல் மரங்களும், கொடிப்பூவரசு செடிகளும் மண்டிக் கிடக்கின்றன.

      இதனால், மழைக் காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், அறுவடை நேரத்தில் நெல் மகசூல் பாதிக்கப்படுகிறது. மேலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கண்மாய்கள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள் பெயர் அளவுக்கு மட்டுமே தூர்வாரப்படுவதால், போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

      பருவமழை பெய்யவுள்ள நிலையில், இப்போதே காண்மாய்கள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரினால் விவசாயிகள் பயன் பெறமுடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai