Enable Javscript for better performance
பரமக்குடி சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்

    By பரமக்குடி  |   Published on : 29th July 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் செல்லும் வாருகால் முறையாக பராமரிக்கப்படாததால், மழை நேரங்களில் சாலைகள் முழுவதும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

       பரமக்குடி நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் அனைத்தும் முறையாக நகராட்சி அனுமதி பெறாமலும், நகரமைப்பு விதிமுறைகளுக்கு மாறாக கழிவுநீர் செல்லும் வாருகால் பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தும், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கடைபிடிக்காமலும் கட்டப்பட்டு வருகின்றன.  இதனால், நகரில் புதன்கிழமை மாலை பெய்த மழை நீரை சேமிக்க முடியாததுடன், வாருகால் பராமரிக்கப்படாததால் வெளியேற்ற வழியின்றியும் காந்தி சிலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை, குத்துக்கல் தெரு, கொல்லம்பட்டறை தெரு, கீழப்பள்ளி வாசல் தெரு, சந்தைக்கடை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கி நின்றது.

      இதனால், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்ததுடன், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியது. எனவே, வாருகால் முறையாகப் பராமரித்து, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai