Enable Javscript for better performance
பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்துவதற்கு வந்திறங்கிய புதிய இரும்பு கர்டர்கள் - Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்துவதற்கு வந்திறங்கிய புதிய இரும்பு கர்டர்கள்

    By ராமேசுவரம்  |   Published on : 29th July 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்துவதற்காக, வியாழக்கிழமை பாம்பன் ரயில் நிலையத்துக்கு புதிய இரும்பு கர்டர்கள் கொண்டு வரப்பட்டன.

      ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் 146 சிமென்ட் தூண்கள் கட்டப்பட்டு, அதன் மீது 2 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தண்டவாளங்களை தாங்கி நிற்கும் வகையில் 145 இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 71 கர்டர்கள் கடல் உப்புக் காற்றினால் அரிக்கப்பட்டு சேதமடைந்து வருகின்றன.

      எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில் சேதமடைந்துள்ள இந்த கர்டர்களை மாற்றுவதற்காக, கடந்த 2015 இல் முதல்கட்டமாக 28 கர்டர்கள் மாற்றப்பட்டன. அதையடுத்து, மீதமுள்ள 43 இரும்பு கர்டர்களை மாற்றுவதற்கு ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு  நடத்தி வந்தனர்.   இந்நிலையில், வியாழக்கிழமை 10 புதிய இரும்பு கர்டர்கள் பாம்பன் ரயில் நிலையத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்டன. இவை இன்னும் ஒரு சில நாள்களில் பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai