சுடச்சுட

    

    மண்டபம் கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்து

    By ராமேசுவரம்  |   Published on : 29th July 2016 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டபம் வடக்குக் கடல் பகுதியில் பாதுகாப்புக் கருதி, இந்தியக் கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

      ராமநாதபுரம் மாவட்டக் கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள்கள், கடல் அட்டைகள் கடத்துவது மற்றும் அகதிகளை ஏற்றிச்செல்வது உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

      இதைத் தடுப்பதற்காக, ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய கடல் பகுதிகளில் இந்தியக் கடலோரக் காவல்படையினரும், போலீஸாரும் தினசரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இதன் ஒரு பகுதியாக, மண்டபம் பகுதியிலுள்ள இந்தியக் கடலோரக் காவல் படையினர் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கடல் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர்களையும், மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த விசைப் படகுகளையும், மீனவர்களையும் சோதனையிட்டனர்.

      தொடர்ந்து, அப்பகுதியில் மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்பு கருதியும் பல மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai