சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் 150 விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்

  By ராமநாதபுரம்  |   Published on : 29th July 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலயா துவக்கப் பள்ளியில், 150 விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

     விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் 5 பேர் வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.

    இது குறித்து, சிற்பக் கலைஞரான வேலு கூறியது: சிவலிங்கத்தை விநாயகர் தூக்கிச் செல்வது போன்ற வடிவத்திலும், தலைப்பாகை அணிந்து போருக்கு கையில் சூலாயுதம் ஏந்திச் செல்லும் ஜான்சிராணி வடிவிலும், நாதஸ்வரம் மற்றும் முரசு மீது விநாயகர் அமர்ந்திருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறோம்.

     எங்களது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில் விநாயகர் சிலைக்குத் தேவையான உடல் பாகங்களை தனித்தனியாகச் செய்து, அவற்றை லாரிகளில் ராமநாதபுரம் கொண்டு வந்துள்ளோம். தற்போது, இந்த உடல்பாகங்கள் அனைத்தையும் 5 சிற்பக் கலைஞர்கள் மூலம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மொத்தம் 150 விநாயகர் சிலைகளை செய்ய இருக்கிறோம். ஆகஸ்ட் தொடக்கத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் வர்ணம் பூசப்பட்டு ஒப்படைக்கப்படும். 3 அடி முதல் 15 அடி வரை உள்ள இந்த சிலைகளில் எந்தவித ரசாயனப் பொருளும் கலக்காமல் காகிதக்கூழ், கிழங்குமாவு, சவுக்கு குச்சி ஆகியனவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரித்து வருகிறோம்.

    மேலும், சிலைகளை தயாரிப்பதால் சிற்பக் கலைஞர்கள் விரதமிருந்து வருகிறோம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai